மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

சண்டே ஸ்பெஷல்: முடியை பராமரிக்கும் ஹேர் ஸ்பா!

சண்டே ஸ்பெஷல்: முடியை பராமரிக்கும் ஹேர் ஸ்பா!

அழகு நிலையங்களில் ஹேர் ஸ்பா சீரமைப்பு என்பது ஒரு சமீபத்திய ட்ரெண்ட் ஆகும். இது முடி வளர்ச்சிக்கான சிகிச்சை ஆகும். பெரும்பாலான மக்கள் பொடுகு, முடி உதிர்தல், கரடுமுரடான மற்றும் பொலிவிழந்த முடி போன்ற முடி பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் ஹேர் ஸ்பா சிகிச்சையால் இந்தப் பிரச்சினைகளைக் குறைக்க முடியும். இது உச்சந்தலை சீரமைப்புக்குப் பயன்படுவதன் மூலம், நன்கு ரிலாக்ஸ் அளித்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்றது

மென்மையான முடியை ஹேர் ஸ்பா சீரமைப்பு மயிர்க் கால்களை வலுவடையச் செய்து முடியை வளரச் செய்கிறது. இது முடி வளர்ச்சிக்கான ஒரு சிகிச்சை ஆகும். இது முடியின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. பொலிவிழந்த, சேதமடைந்த முடிக்கு ஸ்பா சிகிச்சை அற்புதமான முடிவைக் கொடுக்கிறது. மென்மையான, ஆரோக்கியமான முடி ஹேர் ஸ்பா முறை மூலம் உறுதி செய்யப்படுகிறது. பலர் முடி இழப்பு மற்றும் பொடுகு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றிற்கு ஸ்பா சிகிச்சை ஒரு சிறந்த தீர்வாகும்.

இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம் மன அழுத்தம், காலநிலை, ஹார்மோன் மாற்றங்கள், முறையற்ற முடி பராமரிப்பு போன்றவையாகும். ஹேர் ஸ்பா சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம், ரிலாக்ஸ் அடைவதுடன் மன அழுத்தம் குறைந்து முடி வளர்ச்சி ஏற்படும். ஹேர் ஸ்பா சிகிச்சை மயிர்க் கால்களை வலுவடையச் செய்வதால், முடியை அடர்த்தியாக வளரச் செய்யும். ஸ்பா சிகிச்சை முடியைச் சீரமைப்பதோடு மட்டுமின்றி, முடியை அதிகரிக்கச் செய்து ஆரோக்கியமான தோற்றத்தையும் அளிக்கிறது. உச்சந்தலையில் வயதாவதால் முடி இழப்பு ஏற்படும். ஆனால் ஹேர் ஸ்பா சிகிச்சையானது, இதனைத் தடுத்து உச்சந்தலையில் சரும சுரப்பைத் தோன்றச்செய்து முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. உச்சந்தலையில் மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்துகிறது. இன்றைய வாழ்க்கையில் மிகவும் பொதுவான பிரச்சினை மன அழுத்தம். இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் முறையற்ற வாழ்க்கை, வேலை அழுத்தம். இதற்கான சிறந்த தீர்வு ஸ்பா சிகிச்சையாகும்.

இந்தச் சிகிச்சை உச்சந்தலையில் மசாஜ் செய்யும் முறையை உள்ளடக்கியிருப்பதால், இது உடலுக்கு தளர்வளித்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் முடி நன்றாக வளரும். இதன் மூலம் உச்சந்தலையில் எண்ணெய் ஆழமாக ஊடுருவிச் செல்லும். இந்த எண்ணெய் முடிக்கு ஊட்டமளித்து முடியைப் பொலிவிழந்த நிலையிலிருந்து தடுக்கும். ஆரோக்கியமான உச்சந்தலை, வலுவான முடி வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றது. உச்சந்தலையை அழுக்கு இல்லாமல் பராமரிக்கும்போது, முடி வளர்ச்சியில் எந்தப் பிரச்சனையும் ஏற்படுவதில்லை.

ஹேர் ஸ்பா சிகிச்சையை முறையாக எடுத்துக் கொள்வதன் மூலம், உச்சந்தலையைச் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க முடியும். முடியை நன்றாக மற்றும் ஆரோக்கியமாகப் பராமரிக்க, உச்சந்தலையில் எண்ணெய் சுரப்பு சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எண்ணெய் குறைவாக சுரந்தால், பொலிவிழந்த மற்றும் உலர்ந்த முடி ஏற்படுகிறது. எண்ணெய் சுரப்பு அதிகம் இருந்தால், முடி ஓட்டும் தன்மை பெறுகிறது. ஆகவே முடியை ஆரோக்கியமாகப் பராமரிக்க உச்சந்தலையில் எண்ணெய் சுரப்பு சீரானதாக இருக்க வேண்டும். அதற்கு ஹேர் ஸ்பா உதவும்.

மாசு காரணமாக முடி எளிதில் சேதமடைகிறது. மயிர்க் கால்களில் தேங்கும் அசுத்தங்களால் முடி இழப்பு உண்டாகும். வழக்கமாக முடியை அலசுதல் மற்றும் ஹேர் ஸ்பா சிகிச்சையை மேற்கொள்ளுதல், முடியைச் சுத்தமாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்கும். ஹேர் ஸ்பா சிகிச்சை ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் பொலிவிழந்த முடியைச் சரிசெய்வதில் உறுதி அளிக்கின்றது. ஊட்டச்சத்து நிறைந்த முடி ஸ்பா சிகிச்சையில் மீண்டும் ஈரப்பசையூட்டப்படுகிறது. இது எண்ணெய்ச் சுரப்பை சமன் செய்து முடியை மென்மையாக மற்றும் மிருதுவாக்குகின்றது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 4 பிப் 2018