மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

ரேஷன் தகவல்களைத் திருடிய இருவர் கைது!

ரேஷன் தகவல்களைத் திருடிய இருவர் கைது!

குஜராத்தில் ரேஷன்கார்டு தகவல்களைத் திருடிய ரேஷன் கடை உரிமையாளர்கள் இருவரை போலீஸார் நேற்று (பிப்ரவரி 3) கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் மக்களுடைய ரேஷன் கார்டு விவரங்கள், கை ரேகை, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் சட்டவிரோதமாகத் திருடப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி இருவரைக் கைது செய்துள்ளனர்.

குற்றப் பிரிவு, காவல் உதவி ஆணையாளர், ஆர் சரவையா, ”ரேஷன் கார்டு விவரங்கள் திருடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் சோதனை நடத்தினோம். அதில் ரேஷன் கடை ஊழியர்களான பாபுலால் சோகாஜி போரிவால்(53) மற்றும் சம்பத்லால் ரோதிலால் ஷா (61) ஆகிய இருவரும் 15 ஆயிரம் ரூபாய்க்கு சாப்ஃட்வேர் ஒன்றை வாங்கி அதன் மூலம் பொதுமக்களின் பயோமெட்ரிக் விவரங்கள் மற்றும் ஆதார் விவரங்களைத் திருடியது தெரியவந்தது.மேலும், அந்த விவரங்களை வைத்து போலி ஆவணங்களைத் தயாரித்து முறைகேடாக ரேஷன் பொருட்களைப் பதுக்கியுள்ளனர். அவர்களிடம் அந்த சாஃப்ட்வேரை விற்பனை செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

சூரத் காவல் ஆணையர் சதீஷ் ஷர்மா , ”ரேஷன் பொருட்களை விநியோகிப்பதற்காக, பொதுமக்களின் சுயவிவரங்களை தனியார் ஏஜென்சிகள் மூலம் ஒப்பந்த அடிப்டையில் மாநில அரசு பெற்று வருகிறது. அவ்வாறு சுயவிவரங்கள பெறும் சில தனியார் ஏஜென்சிகளில் பணிபுரியும் நபர்கள் , மக்களின் விவரங்களை சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு விற்பனை செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

பாபுலால் சோகாஜி போரிவால் மற்றும் சம்பத்லால் ரோதிலால் ஷா ஆகிய இருவர் மீதும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் உட்பட ஐபிசி 406, 409, 467, 468 மற்றும் 471ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 4 பிப் 2018