மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

தெலுங்கு டப்பிங்கில் விஜய் சேதுபதி

தெலுங்கு டப்பிங்கில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தமிழில் சீதக்காதி, சங்குத்தேவன், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் ஒரு காட்சியில் மட்டும் வந்து செல்லும் நடிகராக நடித்துக்கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. தற்போது தனது அசராத நடிப்பாலும், உழைப்பாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடம்பிடித்துவிட்டார்.

இதையடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சைரா படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான் 'சைரா' படத்தின் கதைக் கரு. இப்படம் மூன்று மொழிகளில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிறது. சுதந்திரப் போராட்ட தியாகி நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கொண்ட இப்படத்தில் நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். 200க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் நடிகர்கள் நடிக்கிறார்கள். சிரஞ்சிவியின் மகன் ராம்சரண் தேஜா தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராவதால், விஜய் சேதுபதிக்கு வெயிட்டான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 4 பிப் 2018