மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

பெண்களின் சுகாதாரம்: கோவா அக்கறை!

பெண்களின் சுகாதாரம்: கோவா அக்கறை!

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள்தொகையில், எந்த நேரத்திலும், சராசரியாக மாதவிடாய் சுழற்சிக்கு உட்படும் பெண்களின் எண்ணிக்கை 35.5 கோடியாக உள்ளது. அவர்களில் 70 சதவிகிதம் பேர், தங்களது குடும்பத்தால் நாப்கின் வாங்கித் தரமுடியவில்லை எனக் கூறுகின்றனர்.

2012ஆம் ஆண்டில், இந்தியாவில் சுகாதார மாதவிடாய் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 40 சதவிகித பள்ளிகள் பொதுக் கழிவறை இல்லாமலும், 40 சதவிகித பள்ளிகள் பெண்களுக்கென தனியாகக் கழிவறை இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில், 88 சதவிகித பெண்கள் மற்றும் இளம்பெண்கள் மாதவிடாயின்போது சாம்பல், பழைய துணி, வைக்கோல், இலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது தோல் அழற்சி, நோய்த்தொற்றுகள், சில சந்தர்ப்பங்களில் கர்ப்பப் பை வாய்ப் புற்றுநோய் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும்.

இந்தப் பெண்கள் மற்றும் இளம் பெண்களில் பலர் சமுதாயத்தில் பின்தங்கிய குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள். அதனால், நிதி, சமூக நிலைமைகள் போன்றவை சுகாதாரமான மாதவிடாய் நடைமுறைகளை அவர்களுக்கு தடுக்கின்றன.

கோவா மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் தொழிற்துறை, தோட்டங்கள், கட்டுமானத் தளங்கள், அரசு நடத்தும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் சானிட்டரி நாப்கின் விநியோக எந்திரத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறை இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இந்தப் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தவும் உதவுவதாக நம்புகிறது.

இந்த திட்டம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், 2018-19ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சொல்லியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 1) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ரோஹன் கவுண்டே தலைமையிலான குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 4 பிப் 2018