மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

பேரன்பு: இருபதில் ஒரு தமிழ்த் திரைப்படம்!

பேரன்பு: இருபதில் ஒரு தமிழ்த் திரைப்படம்!

நெதர்லாந்து நாட்டிலுள்ள ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் ‘பார்வையாளர்களின் விருது’ பிரிவில் ராம் இயக்கிய பேரன்பு திரைப்படம், அந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது படங்களில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது.

உலகின் பாரம்பர்ய திரைப்பட விழாக்களில் ரோட்டர்டாம் திரைப்பட விழாவும் ஒன்று. 47 வருடங்களைக் கடந்துவந்துள்ள இவ்விழாவில், ஓர் இயக்குநரின் முதல் இரண்டு படைப்புகள் மட்டுமே முதன்மைப் போட்டிப் பிரிவில் கலந்துகொள்ள முடியும். எனவே, இயக்குநர் ராமின் பேரன்பு (ஆங்கிலத்தில் Resurrection) திரைப்படம் பார்வையாளர்கள் விருதுக்கு மட்டுமே போட்டியிட்டது.

தியேட்டருக்கு உள்ளே செல்லும்போது கையில் கொடுக்கப்படும் பேப்பரைக் கிழித்து, படம் முடிந்து வெளியேறும்போது எந்தளவுக்கு படம் பிடித்தது என்பதை பார்வையாளர்கள் தெரிவிக்கலாம். பார்வையாளர்களின் வாக்கின் அடிப்படையில் தரக்கூடிய இவ்விருதில் 187 உலகத் திரைப்படங்கள் இவ்வருடம் போட்டியிட்டன. அதில் பேரன்பு திரைப்படம் 20ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், சிறந்த ஆசிய படத்துக்கு கொடுக்கும் NETPAC விருதுக்குப் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாய்ப்பளித்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும் வாக்களித்த திரைப்பட விழாவின் பார்வையாளர்களுக்கும் இயக்குநர் ராம், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஆகியோர் நன்றிகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 4 பிப் 2018