மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

ரியல் மாட்ரிட்டை சமன் செய்த லெவாண்டே!

ரியல் மாட்ரிட்டை  சமன் செய்த லெவாண்டே!

லா லீகா தொடரில் இன்று (பிப்ரவரி 4) நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை 2-2 என்ற கோல் கணக்கில் லெவாண்டே அணி சமன் செய்தது.

லா லீகா கால்பந்துத் தொடர் கடந்த வருடம் (2017) ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. மொத்தம் இருபது அணிகள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். தற்போது வரை அனைத்து அணிகளும் 20 போட்டிகளை விளையாடியுள்ள நிலையில் தொடரின் பாதி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் முதல் நான்கு இடங்களில் பார்சிலோனா, அட்லான்டிகோ மாட்ரிட், வலேனிக்கா, ரியல் மாட்ரிட் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

நான்காவது இடத்திலுள்ள வலுவான அணியான ரியல் மாட்ரிட் அணி 17ஆவது இடத்திலுள்ள லெவாண்டே அணியுடன் இன்று விளையாடியது. இதற்கு முன்னர் இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டம் 1-1 என சமன் ஆனது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே கோல் முயற்சியைத் தொடர்ந்துவந்த ரியல் மாட்ரிட் அணி லெவாண்டே அணிக்கு வாய்ப்பே வழங்காமல் விளையாடியது. போட்டியின் 11ஆவது நிமிடமே கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பினை பயன்படுத்திய செர்ஜியோ ரோமஸ் முதல் கோல் அடித்து ரியல் மாட்ரிட் அணியை முன்னிலை பெறச் செய்தார். அவரைத் தொடர்ந்து ரியல் மாட்ரிட் வீரர் கள் ரொனால்டோ, பெஞ்சமா ஆகியோரும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் அதனை எதிரணி கோல் கீப்பர் சிறப்பாகத் தடுத்து அணியைக் காப்பாற்றினார்.

அதுவரை ரியல் மாட்ரிட் வீரர்களைத் தடுத்து விளையாடிவந்த லெவாண்டே அணி வீரர்கள் கோல் போடுவதற்கு ஒரு எளிய வாய்ப்பு கிடைத்தது. அதனைச் சரியாகப் பயன்படுத்திய இம்மானுவேல் 42ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். அதன் பின்னர் இரண்டாம் பாதி முழுவதும் ரியல் மாட்ரிட் அணியின் கைவசமே பந்து இருந்தது. அந்த வீரர்கள் கோல் அடித்துவிடக்கூடாது என்பதை மட்டுமே கருத்தில் வைத்துக்கொண்டு விளையாடிய லெவாண்டே அணியினர் கோல் அடிக்கும் முயற்சியை மேற்கொள்ள முடியவில்லை.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 4 பிப் 2018