அதிகரித்து வரும் என்கவுன்ட்டர்கள்!


உத்தரபிரதேசத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 18 என்கவுண்டர்கள் நடந்துள்ளது. இதில் மாநிலம் முழுவதும் 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த வெள்ளியன்று கோரக்பூரில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தொழிலதிபர் தினேஷ் குப்தாவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவர்களின் தலைக்கு தலா 50 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 19ஆம் தேதி யோகி ஆதித்யநாத் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தில் பதுங்கி இருக்கும் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் அல்லது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர் மாநிலம் முழுவதும் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அங்குக் கடந்த 48 மணி நேரத்தில் 18 என் கவுண்டர்கள் நடக்கிறது. மாநிலம் முழுவதும் 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10 மாதத்தில் மட்டும் உத்தரப் பிரதேசத்தில் 900 என் கவுண்டர்கள் நடந்துள்ளது. இதில் 34 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். 200 பேர் காயம் அடைந்தனர். இதேபோல் போலீஸ் தரப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரிக்கப்படுவது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.