மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்!

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரண்டு ஆண்டுகளில் 8 சதவிகிதமாக அதிகரிக்குமென்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் இதுகுறித்து கூறுகையில், "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 முதல் 7.5 சதவிகிதமாக அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரித்து 2020-21ஆம் நிதியாண்டில் 8 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார். முன்னதாக பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "இந்தியா கடந்த மூன்று வருடங்களில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். விரைவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக அதிகரித்து, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு என்ற இடத்தை இந்தியா பிடிக்கும்" என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018