மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

காவிரி வரலாறு தெரியாதா?

காவிரி வரலாறு தெரியாதா?

'நான் பிறந்ததே காவிரி டெல்டாவில் தான், எனக்கு காவிரியின் வரலாறு தெரியாதா' என்று துணை முதல்வருக்கு ஆர்கே நகர் எம்.எல்.ஏ தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘தமிழகம் தலைநிமிரட்டும், தமிழர் வாழ்வு மலரட்டும்’ என்ற முழக்கத்துடன் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் டிடிவி தினகரன் மக்களை சந்தித்து வருகிறார். தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் தொடங்கிய சுற்றுப்பயணம் முன்றாம் நாளான இன்று, பாபநாசத்தில் மக்களை சந்தித்து வருகிறார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, காவிரி வழக்கு கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்றும் டிடிவி தினகரனுக்கு காவிரி வழக்கின் சரித்திரம் தெரியாது என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

தனது சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (பிப்ரவரி 4) பாபநாசத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், "எனக்கு காவிரி வரலாறு தெரியாது என்கிறார்கள், தினகரன் பிறந்ததே காவிரி டெல்டாவில் தான், தினகரனுக்கு காவிரி நதிநீர் சரித்திரம் தெரியாமல் எப்படி இருக்கும் " என்று துணை முதல்வருக்கு பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018