மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

தேர்தல் வந்தால் கட்சி: விஷால்

தேர்தல் வந்தால் கட்சி: விஷால்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கட்சி செயல்பாடுகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் சமீபத்தில் நடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவருடைய வேட்பு மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து அரசியல் குறித்து பேசியும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார் விஷால்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 4) செய்தியாளர்களை சந்தித்த விஷால், தன்னுடைய அரசியல் பயணம் குறித்துப் பேசினார், "இங்கே உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என்பதே இன்னும் அறிவிக்கப்படவில்லை. முறையான தேர்தல் தேதி அறிவித்த பின்பு கட்சியின் ஆரம்பிக்கும் செயல்பாடுகள் குறித்த முடிவுகளும் மேற்கொள்ளப்படும்" என்றார்.

மேலும் "பேருந்து கட்டண உயர்வு பொதுமக்களை பெருமளவில் பாதித்துள்ளது. மக்களிடையே இது குறித்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டு மக்கள் படும் துயரங்களை அரசின் பார்வைக்கு எடுத்து செல்ல வேண்டும். எந்த ஒரு திடீர் விலையேற்றமும் மக்களின் தினசரி வாழ்க்கையை அதிகளவில் பாதிக்கும் என்பதை அரசு உணர வேண்டும் என்று கூறிய விஷால், பேருந்துக் கட்டணத்தை அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த வழிபட்டுத் தலமான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை அளித்துள்ளது. இது மாதிரியான விபத்துகள் மீண்டும் நடக்காத அளவுக்கு அரசு அதீத கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டுவது மிகவும் அவசியம் என்றும் கூறினார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 4 பிப் 2018