மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

துணைவேந்தர் சிறையில் அடைப்பு!

துணைவேந்தர் சிறையில் அடைப்பு!

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதியை பிப்ரவரி 16 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு உதவியதாக மதிவாணன் என்பவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பணி நியமனத்துக்குத் துணைவேந்தர் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி சுரேஷ் என்பவரிடம் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்காக ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் ரொக்கமாகவும் மீதத் தொகையை காசோலையாகப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் நேற்றுவரை நடவடிக்கை எடுக்கப் படாமல் இருந்தது. சரியான நேரத்திற்காகக் காத்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையிடம், சுரேஷிடம் லஞ்சம் பெறும் போது கணபதி மாட்டிக்கொண்டார்.

துணைவேந்தர் கணபதியின் திருச்சி வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இதில் ரூ.56000 மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளைக் கிழித்து கழிவறையில் போடப்பட்டது தெரியவந்தது. அதையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர், பிளம்பர்கள் உதவியுடன் பறிமுதல் செய்தனர்.

சுமார் 13 மணி நேரச் சோதனைக்கு பிறகு கணபதி, அவருக்கு உதவியாக இருந்த தர்மராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். கோவைச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மினோ உத்தரவின்பேரில், வரும் 16ஆம் தேதி வரை கோவை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், துணைவேந்தர் கணபதி செய்தியாளர்களிடம், தன் மீதான புகார், திட்டமிட்ட சதி என்று கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து, அவரது மனைவியும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018