இன்று நான்கு மணி நேரத்துக்கு ரயில் புக்கிங் கிடையாது!


பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு ஒத்திகை காரணமாகத் தமிழகம் முழுவதும் ரயில்வே பயணிகள் முன்பதிவு அமைப்பு இணையதளம் இன்று (பிப்ரவரி 4) நான்கு மணி நேரம் இயங்காது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கணினி தகவல்களைச் சேகரிக்கும் பணி நடைபெற உள்ளதால், தமிழத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மதியம் 2.05 முதல் 3.45 மணி வரை ரயில்வே பயணிகள் முன்பதிவு அமைப்பு, இணையதளம் செயல்படாது. அதுபோன்று இரவு 11.30 முதல் 1.45 மணி வரையும் இணையதளம் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.