மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு தொடக்கம்!

திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு தொடக்கம்!

தஞ்சாவூர் அருகேயுள்ள திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை (பிப்ரவரி 4) கோலாகலமாகத் தொடங்கியது.

திருக்கானூர் ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 900 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். அமைச்சர் துரைகண்ணு, எம்பி வைத்தியலிங்கம் ஆகியோர் போட்டியைத் தொடங்கிவைத்தனர். போட்டி தொடங்குவதற்கு முன், மாடுபிடி வீரர்கள் மாடுகளைத் துன்புறுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர். தற்போது, வாடிவாசல் வழியாகச் சீறிப் பாயும் காளைகளை வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கிவருகின்றனர். பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்களுக்காக இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும், களத்தில் நின்று விளையாடும் காளைகளுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. முதல் பரிசு வெல்லும் வீரர் மற்றும் காளைகளின் உரிமையாளருக்கு ஹோண்டா பைக் வழங்கப்படவுள்ளது.

அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறை மஞ்சம்பட்டியில் 600 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 4 பிப் 2018