மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

ஆடு மாடுகளைப் போல் செயல்படும் தமிழக எம்பிக்கள்!

ஆடு மாடுகளைப் போல் செயல்படும் தமிழக எம்பிக்கள்!

தமிழக எம்பிக்களுக்கு தமிழகத்தின் நலனில் அக்கறையில்லை என்றும் ஆடு, மாடுகளைப் போல் அவர்களின் செயல்பாடுகள் உள்ளன என்றும் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

தென்காசியில் நடைபெறும் கோவில்களின் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாஜக தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி இன்று (பிப்ரவரி 4) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். முன்னதாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர். மாநில நலனுக்கான மசோதாவை அவர்கள் கொண்டுவரலாம். ஆனால் தமிழக எம்பிக்கள் ஆடு, மாடுகளைப் போன்று செயல்படுகின்றனர். இவர்கள் தங்களின் கடமையைச் செய்ய வேண்டும்” எனக் காட்டமாக தெரிவித்தார்.

பின்னர், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தமிழகத்திற்குக் காவிரி நீர் நிச்சயமாகக் கிடைக்காது. மாற்று ஏற்பாடுகள் மூலம் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 4 பிப் 2018