126 மருத்துமனைகள் மீது நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் 126 மருத்துமனைகள் மற்றும் ஸ்கேன் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு அதிகம் நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய மருத்துவக் குழுவினர் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் 3 ஸ்கேன் சென்டர்கள் மற்றும் ஒரு மருத்துமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் 9 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவீரபடுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் 126 மருத்துமனைகள் மற்றும் ஸ்கேன் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆவணங்கள் கிடைத்துவருவதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.