மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

வெங்காயம்: குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ரத்து!

வெங்காயம்: குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ரத்து!

வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) சுரேஷ்பிரபு டிவிட்டரில் மேலும் கூறியுள்ளதாவது: 'பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள புதிய பட்ஜெட்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு சிறப்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நீக்கப்பட்டுள்ளது. தற்போது எல்லா வகையான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்யலாம். வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கும்.'

ஏற்றுமதிக்கான விலை அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் டன் ஒன்றுக்கு 850 டாலராக இருந்த வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஜனவரியில் 700 டாலராக குறைக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை ஜனவரி 19 அன்று வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் வெளியிட்டிருந்தது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் பசுமைத் திட்டம் ஒன்றை அறிவித்து ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் நாட்டின் தேவையான அளவுக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் இருப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018