மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

புத்தகப் பிரியர்கள் சென்னையை தொடர்ந்து தற்போது திருப்பூரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். திருப்பூர்- பத்மினி கார்டனில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கிய புத்தக காட்சி இன்று நிறைவு நாளை எட்டியுள்ளது.

நூற்று நாற்பத்தைந்து அரங்குகளில் எண்ணற்ற தலைப்புகளில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்கள் ஒவ்வொரு வாசகரின் ரசனைக்கும், தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்றபடி அமைந்துள்ளன. அரங்கு எண் 130இல் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நமது மின்னம்பலம் பதிப்பக புத்தகங்கள் அணிவகுத்துள்ளன.

நமது மின்னம்பலம் வாசகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக திருப்பூர் புத்தக கண்காட்சியில் ஸ்மார்ட்போன் பரிசு திட்டம் நடைபெற்றுவருகிறது. நேற்று (பிப்ரவரி 3) நடைபெற்ற குலுக்கலில் திருப்பூரில் பின்னலாடை நூல் விற்பனை செய்து வரும் கீர்த்தி ராகவன் RED MI 4A ஸ்மார்ட்போனை பரிசாக பெற்றார். திருப்பூர் சக்ரவர்த்தி கார்மெண்ட்ஸ் உரிமையாளர் புஷ்பராஜ் அவருக்கு பரிசினை வழங்கி கௌரவித்தார். நத்தம் ஊரைச்சேர்ந்த நமது மின்னம்பலத்தின் நலம் விரும்பியான விஜயன் இப்பரிசினை அளித்துள்ளார். மேலும் புஷ்பராஜ் அவர்கள் தனது சார்பில் வெற்றி பெற்ற வாசகருக்கு புத்தகங்களையும் அன்பளிப்பாக அளித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018