மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

சென்னையில் விழிப்புணர்வு நடைப்பயணம்!

சென்னையில் விழிப்புணர்வு நடைப்பயணம்!

புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தச் சென்னையில் 1000க்கும் மேற்பட்டோர் இணைந்து இன்று காலை (பிப்ரவரி 4) புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டனர். இதில் நடிகை கவுதமி மற்றும் நடிகை தேவயானி கலந்து கொண்டனர்.

புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து, குணப்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் கொடிய உயிர்க்கொல்லி நோய் புற்றுநோய். இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். பெரும்பாலான மக்களுக்குப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் நடிகை கவுதமி புற்றுநோய் குறித்து ஆண்டுதோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சென்னை பெசன்ட்நகரில் அவரது அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நடைப்பயணத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நடிகை கவுதமி, “ ஆரம்பகட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறிந்துவிட்டால் அதில் இருந்து நம்மால் மீண்டு வர முடியும். இளைஞர்கள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 4 பிப் 2018