மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

சாய்னாவை சமன் செய்வாரா பி.வி.சிந்து?

சாய்னாவை சமன் செய்வாரா பி.வி.சிந்து?

இந்தியன் ஓப்பன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் வெற்றி பெற்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இந்தியன் ஓப்பன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 31) தொடங்கியது. அதில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கிடாம்பி, ப்ரநீத் மற்றும் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் ஏமாற்றம் அளித்து அரையிறுதிக்கு முன்னரே தொடரிலிருந்து வெளியேறினர். ஆனால் சிறப்பாக விளையாடிவரும் நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து நேற்று (பிப்ரவரி 3) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்து நாட்டின் ரட்சனோக் இன்டானுடன் பி.வி.சிந்து மோதினார். போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சிந்து ரட்சனோக்கிற்கு வாய்ப்புகள் ஏதும் வழங்காமல் தொடர்ச்சியாக இரண்டு செட்களையும் 21-13, 21-15 எனக் கைப்பற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பிவிவென் ஜாங் உடன் மோத உள்ளார். இவர் காலிறுதியில் சாய்னாவை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 4 பிப் 2018