மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

சோலார் பம்ப் திட்டத்துக்கு கூடுதல் நிதி!

சோலார் பம்ப் திட்டத்துக்கு கூடுதல் நிதி!

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், டீசல் பயன்பாட்டினால் ஏற்படும் கூடுதல் செலவினங்களைக் குறைப்பதற்கும் மத்திய அரசு பட்ஜெட்டில் சோலார் பம்ப் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மின்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) பிசினஸ் லைன் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், " 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சோலார் பம்புகள் மூலமான பாசனத் திட்டத்திற்கு ரூ.1.44 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவும் டீசல் பம்புகளினால் ஏற்படும் செலவினங்களை குறைத்து சோலார் பம்ப் திட்டத்தை மேம்படுத்தவும் அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது" என்றார்.

சோலார் பம்ப் திட்டமான கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மஹாபியான் திட்டத்தின் கீழ் உதவித்தொகையாக மத்திய அரசால் ரூ.48,000 கோடித் தொகை பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள மானியத் தொகை மாநில அரசுகள், கடன் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இதனைக் கொண்டு 28,250 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போதைய மின் பம்புகளை விட சோலார் பம்புகளின் வேகம் இருமடங்காக இருக்கும், இதன்மூலம் விவசாயிகள் 50% மின்சாரத்தைச் சேமிக்கலாம். தற்போது விவசாயிகள் நீர்ப்பாசனத்திற்கு சோலார் பம்புகளையே அதிகமாக உபயோகித்து வருவதாகவும், சோலார் ஆற்றல் பயன்பாட்டை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டுமெனவும், சோலார் ஆற்றலைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுமென்றும் அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார். இதில் 30 சதவிகித மானியம் மத்திய அரசாலும், 30 சதவிகிதம் மாநில அரசாலும், 30 சதவிகிதம் கடன்களின் மூலமாகவும் எஞ்சிய 10 சதவிகிதம் விவசாயிகளாலும் ஏற்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018