மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

தமிழகத்தில் ராகுல் சுற்றுப்பயணம்!

தமிழகத்தில் ராகுல் சுற்றுப்பயணம்!

தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

வரும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து பல்வேறு தலைவர்களும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளைத் அழைத்து அண்ணா அறிவாலயத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். அதிமுகவிலும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சி ஆரம்பிக்க உள்ள நடிகர் கமல்ஹாசன் இன்னும் சில நாட்களில் தனது சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளார். தினகரன் ஏற்கனவே மக்கள் சந்திப்பு: புரட்சி பயணம் என்ற பெயரில் தஞ்சையில் மக்களைச் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் நெல்லையில் இன்று (பிப்ரவரி 4) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தி விரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்" என்று கூறினார்.

போக்குவரத்துக் கட்டணம் குறித்து வரும் 6ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்று கூறிய அவர், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் இல்லை. பொதுப் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டதால் ரயில்வேத் துறை வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு மத்திய பாஜக அரசு எதையுமே செய்யவில்லை. மொத்தத்தில் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட்தான் இது. ஓராண்டுக்கு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஐந்தாண்டு திட்டம் போல உள்ளது. அருண் ஜேட்லி பட்ஜெட்டுக்கு பதில் தேர்தல் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டிய திருநாவுக்கரசர், மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த மத்திய அரசு திட்டமிடுகிறது என்றும் தெரிவித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018