மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

மருத்துவக் காப்பீடு திட்டத்துக்குப் பதிலாக மருத்துவமனை!

மருத்துவக் காப்பீடு திட்டத்துக்குப் பதிலாக மருத்துவமனை!

சுகாதாரத் துறைக்கான மத்திய பட்ஜெட்டில் மருத்துவக் காப்பீட்டுக்காக அறிவித்துள்ள நிதியைக்கொண்டு, புதிய அரசு மருத்துவமனைகளை நிறுவ வேண்டும் எனச் சமூக சமத்துவத்துக்காக மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் நடைமுறையில் சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் காப்பீடு திட்டம் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பலன் பெறும் நோக்கத்திலேயே இந்தப் பிரமாண்டமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

“மத்திய பட்ஜெட்டில் 10 கோடி குடும்பங்களுக்குப் பயனளிக்கும் விதமாக ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்தார்.

இந்தக் காப்பீடு திட்டத்தினால் மிகப் பெரிய அளவுக்குத் தனியார் மருத்துவமனைகளும், மருத்துவக் காப்பீடு நிறுவனங்களுமே பயனடையும். மேலும் இத்திட்டம் பொது சுகாதாரத் துறையை வலுவிலக்கச் செய்து, தனியார் மருத்துவமனைகளை வலுப்படுத்தும் திட்டமாகவே இருக்கும்.

இத்திட்டத்துக்காக ஒதுக்கப்படும் ரூ 15,000 கோடிக்கும் மேற்பட்ட நிதியைக்கொண்டு, ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனைகளை உருவாக்கலாம். அரசு மருத்துவமனை மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்க முடியும். ஆனால், அதை விடுத்து அமெரிக்கா பாணியில், மருத்துவக் காப்பீட்டை அடிப்படையாகக்கொண்ட மருத்துவத் துறையை உருவாக்குவது ஏழை எளிய மக்களின் நலன்களுக்கு எதிரானது.

இதையடுத்து, 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளனர். இம்மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு உருவாக்குமா அல்லது மாநில அரசுகள் உருவாக்குமா என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. ஏற்கனவே, தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்து மூன்றாண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இதுவரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரியைத் தொடங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காச நோயாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.500 வழங்குவதற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது வரவேற்கக்கூடியது. ஆனால், பல மருந்துகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல்கொண்ட காசநோய் பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு (Multi Drugs Resistance Tuberculosis), காசநோயைக் குணப்படுத்தும் புதிய மருந்துகள் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அந்த தட்டுப்பாட்டைப் போக்கிட நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 4 பிப் 2018