மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

பல்கலைக்கழகங்களில் ஊழல்: சிபிஐ விசாரணை தேவை!

பல்கலைக்கழகங்களில் ஊழல்: சிபிஐ விசாரணை தேவை!

‘தமிழகத்தில் உயர்கல்வி தழைக்க வேண்டுமானால் கடந்த 15 ஆண்டுகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடந்த ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணை தேவை’ என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் பிரிவினர் நேற்று (பிப்ரவரி3) கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல் குறித்து நேற்று (பிப்ரவரி 3) அறிக்கை வெளியிட்டுள்ள பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இப்போது கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி கையூட்டு வாங்கிக் குவிப்பதையே முழுநேரத் தொழிலாக செய்துவருபவர். அவரை கைது செய்தது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும் இதில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனது அறிக்கையில், ‘பாரதியார் பல்கலைக்கழக மற்றொரு முன்னாள் துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன், திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் முத்துக்குமார், மீனா, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இராசாராம், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தாண்டவன், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுப்பையா, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரை என அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அனைத்து துணைவேந்தர்களின் காலங்களிலும் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது’ என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018