மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

துருவங்களை இணைத்த துணைநிலை ஆளுநர்!

துருவங்களை இணைத்த துணைநிலை ஆளுநர்!

புதுச்சேரி மாநிலத்தில் அரசியலால் பிரிந்திருந்த மாமனார் மருமகனை மீண்டும் இணைய வைத்து அரசியல்களத்தைச் சூடாக்கியுள்ளார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். கடந்த முறை முதல்வராகவும் பதவி வகித்தார். இவருக்கு எதிராக அரசியல்களத்தில் இறக்கிவிடப்பட்டவர் பொதுப்பணித் துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி தலைவருமான நமச்சிவாயம். இவர் ரங்கசாமியின் அண்ணன் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிக்கட்சி தொடங்கி பலமாக இருந்த ரங்கசாமியை அரசியல் ரீதியாகவும், ஆள் பலத்தாலும் எதிர்க்க காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரும் தயங்கிய நிலையில் நமச்சிவாயத்தைப் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்கவைத்தனர்.

ரங்கசாமியை அனைத்து விதத்திலும் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்த நமச்சிவாயம், ஆட்சியமைந்ததும் பொதுப்பணித் துறையில் அமைச்சராகப் பதவி வகித்துவருகிறார்.

எலியும் பூனையுமாக இருந்த ரங்கசாமியையும், அமைச்சர் நமச்சிவாயத்தையும் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது அரசியல் தந்திரத்தால் ஒன்றுசேர்த்து வைத்துள்ளார்.

அதாவது புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி பின்புறத்தில் உள்ள கணகம் ஏரியைத் தூர்வாரி அழகுப்படுத்தி சிறிய போட் ஹவுஸ் உருவாக்கப்ட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 3) நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் நமச்சிவாயத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ரங்கசாமிக்கும் அழைப்பு கொடுத்து வரவழைத்தார் கிரண்பேடி.

காலையில் இருவர் கரங்களைப் பிடித்து ஒன்றுசேர்த்து வைத்து ரிப்பன் வெட்டச் சொல்லி புதுவை அரசியலில் பூகம்பத்தை உருவாகியுள்ளார் கிரண்பேடி.

இவ்விழாவால் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் இருப்பதைப் பலராலும் உணரமுடிகிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 4 பிப் 2018