ராஜமௌலி தேடும் அந்த ஒருவர் யார்?

பாகுபலி வெற்றிக்குப் பிறகு தேவையான ஓய்வு எடுத்துவிட்டு புதுக்கதையுடன் களமிறங்கியிருக்கிறார் ராஜமௌலி. வழக்கம்போலவே, அவரது தந்தையின் கதைக்கு உயிர்க்கொடுக்கத் தயாராகியிருக்கும் அவர், அதற்குத் தேவையான கருவிகளாக விளங்கும் நடிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகிய தெலுங்கின் முன்னணி நடிகர்கள் இருவரும் ஏற்கெனவே ஹீரோ ரோலில் கமிட் ஆகிவிட்ட பின்னும் யாரைத் தேடுகிறார் ராஜமௌலி என்ற சந்தேகத்துக்கு விடை கிடைத்திருக்கிறது.
பாக்சிங்கை மையமாக வைத்து எடுக்கப்படும் ராஜமௌலியின் இந்தத் திரைப்படத்தில், இரண்டு ஹீரோக்களுக்கும் சமமாக போட்டியிடக்கூடிய வில்லன் தேவைப்படுகிறார். இந்திய சினிமாவில் நிறைய மிரட்டலான வில்லன்கள் இருந்தாலும், ராஜமௌலி ஒரு ஹீரோவையே வில்லனாக மாற்ற வேண்டும் என முயற்சிக்கிறார். அவரது ஃபேவரிட் நடிகரான நானி இந்த கேரக்டரில் நடிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தாலும், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நானி நடிப்பில் வெளியாகும் ‘Awe' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டில் கலந்துகொண்டு ராஜமௌலி பேசியபோது, இவர்கள் இருவரும் இந்த வருடம் இணையவில்லை என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டார்.