மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

பத்து வாய்ப்புகளைத் தவறவிட்ட கொல்கத்தா!

பத்து வாய்ப்புகளைத் தவறவிட்ட கொல்கத்தா!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (பிப்ரவரி 3) நடைபெற்ற ஆட்டத்தில் ஓன் கோல் அடித்து எதிரணியை வெற்றி பெற செய்தது கொல்கத்தா அணி.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கடந்த வருடம் (2017) நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுக்கு இடையே இந்த சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் பாதி ஆட்டங்கள் முடிவுற்றுள்ள நிலையில் இரண்டாம் பாதி ஆட்டங்கள் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றன.

அதில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் பலபரீட்சை நடத்தினர். போட்டி தொடங்கிய மூன்றாவது நிமிடமே கொல்கத்தா அணியின் ஜோர்டி மோண்டல் பந்தினை தடுக்க முயற்சி செய்யும்போது, அது தவறுதலாக ஓன் கோலாக மாறியது. அதன் பின்னர் பெங்களூரு அணி கோல் முயற்சியே கிடைக்காமல் தடுமாறியது. கொல்கத்தா அணி முதல் பாதி முடிவதற்குள் நான்கு கோல் வாய்ப்புகள் கிடைத்தும் அதனை கோலாக மாற்ற முடியாமல் திணறியது.

இரண்டாவது பாதி தொடங்கியது முதலே கொல்கத்தா அணியை கோல் முயற்சியில் இருந்து தடுக்க பெங்களூரு அணி முயற்சி செய்தது. அதுவும் சாதாரணமாக அல்ல, ஆக்ரோஷமான முறையில். இதனால் முதலில் ராகுல் பேக்கே மற்றும் ஜோணன் இருவருக்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக மோசமான தடுப்பு ஆட்டத்தை விளையாடி எதிரணி வீரர்களை காயப்படுத்தியதால் ராகுல் பேக்கேவுக்குச் சிகப்பு அட்டை வழங்கப்பட்டு அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் 10 வீரர்களுடன் பெங்களூரு அணி விளையாடியது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொல்கத்தா அணி தொடர்ச்சியாக கோல் அடிக்கும் முயற்சியில் இருந்தது. கார்னர் கிக்கள், ப்ரீ கிக்குகள், கோல் வாய்ப்புகள் என மொத்தமாக 10 வாய்ப்புகள் கொல்கத்தா அணிவசம் கிடைத்தது. இருப்பினும் நூலிழையில் அனைத்து வாய்ப்புகளையும் கொல்கத்தா அணி இழந்தது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 4 பிப் 2018