மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

வலுவான பொருளாதார நிலையில் இந்தியா!

வலுவான பொருளாதார நிலையில் இந்தியா!

இந்த நூற்றாண்டின் முதல் பாதியின் வலுவான பொருளாதார வளர்ச்சிகொண்ட நாடாக இந்தியா விளங்கும் என்று ஹவுஸ் ஆஃப் லோர்ட்ஸ் உறுப்பினரும், பொருளாதார நிபுணருமான ஜிம் ஓ நெய்ல் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மற்றும் இந்திய - பிரிட்டிஷ் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு இணைந்து நடத்திய நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நெய்ல், “இந்த நூற்றாண்டின் முதல் 50 வருடங்களுக்கு உலகப் பொருளாதார நிலையில் இந்தியா வலுவான பங்கைக்கொண்டிருக்கும். பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்பான நிலைகளை இந்தியா கொண்டிருக்கிறது.

இந்தியாவின் மக்கள்தொகை உயர்வு வளர்ச்சி 12.5 சதவிகிதமாகவுள்ளது. இதனால் 2015-35 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவில் வேலைக்குச் செல்லும் தகுதியுடைய மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இது ஐரோப்பாவின் நான்கு பெரிய நாடுகளில் உள்ள மக்கள்தொகையைவிட அதிகமாகும். இதனால் இந்தியாவின் வேலைவாய்ப்பு தேவை அதிகரிக்கும். இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும். கடந்த ஆண்டுகளில் சீனா எந்த வளர்ச்சியைக் கண்டதோ அந்த வளர்ச்சியைவிடக் கூடுதலாக இந்தியா அடுத்த 20 ஆண்டுகளில் வளர்ச்சி காணும் என்று கருதுகிறேன். இந்த நிகழ்வு 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தால் என்ன கூறுவேன் என்று சொல்ல இயலுமா உங்களால்? இந்தியா ஒவ்வொரு மூன்று மாதங்களும் ஒரு நியூசிலாந்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பேன்” என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 4 பிப் 2018