மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

தேயிலை ஏற்றுமதிக்கு முக்கியத்துவம்!

தேயிலை ஏற்றுமதிக்கு முக்கியத்துவம்!

தேயிலை ஏற்றுமதிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென தேயிலைத் தோட்டத் தொழிற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயிகளுக்கென பல சலுகைகள் அறிவித்தபோதும் தேயிலைத் தோட்டத் தொழில்கள், தொழிற்சாலைகள் அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கும், தரமான தேயிலைகளைத் தயாரிப்பதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் மத்திய அரசின் பங்களிப்புப் போதுமானதாக இல்லை என்று தேயிலை உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவிலான தேயிலை உற்பத்தியில் 24 சதவிகிதத்தை இந்தியா கொண்டுள்ளது. இதனால் தேயிலை உற்பத்தியில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தி ஆண்டுக்கு 1,275 மில்லியன் கிலோவாக உள்ளது. மொத்த உற்பத்தியில் 18 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வலுவானதால் இந்திய வர்த்தகப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதேபோல தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேயிலைத் தொழிற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

ஞாயிறு 4 பிப் 2018