மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

கிச்சன் கீர்த்தனா: புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்!

கிச்சன் கீர்த்தனா: புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்!

இன்று புற்றுநோய் தினம். சிலவகை புற்றுநோய்கள் ஏற்பட உணவு பழக்கவழக்கங்களே காரணமாக அமைகிறது. புற்றுநோய் தடுக்கும் காய்கறிகளின் வகைகளைப் பார்க்கலாம். அதற்கு முன்பாக அந்த காய்கறிகள் ஹைபிரிட் காய்கறிகளா, ரசாயன்ம் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படவையா என நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மருந்தே விஷமாகிக் கொண்டிருக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்க எடுத்துக்கொள்பவையினாலே பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருக்க, மிக மலிவாகவும் பார்க்க பளபளப்பாகவும் இருக்கும் செயற்கைத்தன்மைக்கு உட்படுத்தப்பட்ட, ஹைப்ரிட் காய் வகைகளைத் தவிர்ப்போம்.

முருங்கைக்கீரை:

சத்துக்கள்: கால்சியம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி அதிக அளவும், ஓரளவு தாது உப்புகளும் இருக்கின்றன.

பலன்கள்: கண்கள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. பாலூட்டும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் சுரக்கும். சிறுநீரைப் பெருக்கும். மூலநோய் சரியாகும். மலச்சிக்கலைப் போக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். எலும்புகள் உறுதியாகும். தேங்காய் சேர்த்துப் பொரியலாகவும் சாப்பிடலாம்.

பூண்டு:

குடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்புச் சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே, நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

முட்டைகோஸ்:

சத்துகள்: வைட்டமின் சி அதிகம் உள்ளது. சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, இ சத்துகளும் உள்ளன.

பலன்கள்: சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஆண்மை சக்தியை ஊக்குவிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். இளமையைத் தக்கவைக்கும். கண்ணுக்கு மிகவும் நல்லது. கேன்சர் வராமல் காக்கும்.

இஞ்சி:

இஞ்சி ஒரு மூலிகை பொருள். இதன் நன்மைகளோ ஏராளம். ஹீமோதெரபி செய்வதற்கு முன் இஞ்சி சாப்பிட்டால், குமட்டல் உணர்வு குறைவாக இருக்கும். இதனால் எந்த பக்க விளைவுகளும் வருவதில்லை.

மஞ்சள் தூள்:

கேன்சர் செல்களை அழிப்பதில் மசாலாக்களின் ராணி மஞ்சளின் மகிமை முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தோல்நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.

காலிஃப்ளவர்:

காலிஃப்ளவரைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். ஒரு டீஸ்பூன் காலிஃப்ளவர் பசை, கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்குத் தினமும் புற்றுநோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது, புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.

எலுமிச்சை:

உடலிலின் உள்ளுறுப்புகள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அதனால் எற்படும் வலி வீக்கத்தை குறைக்கும் சக்தி எலுமிச்சையிடம் உள்ளது.

தினமும் எலுமிச்சை சாற்றைக் குடித்தால், சிறுநீரகத்தில் ஏற்பட்டிருக்கும் கற்கள் மெல்ல கரைந்து வெளியேறிவிடும். இவை சிறுநீரகத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேறச் செய்து, சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்துகிறது. கல்லீரலையும் சுத்தப்படுத்தும்.

எலும்புகளுக்கு பலம் அளித்து, அவற்றின் இணைப்புகளில் யூரிக் அமிலம் தங்கிவிடாமல் பாதுகாக்கிறது. தசைகளுக்குப் பலம் தந்து உறுதி பெறச் செய்கிறது. அவற்றில் உண்டாகும் வீக்கங்களை போக்கி, புத்துணர்வைத் தருகிறது.

மாதுளை:

நார்ச்சத்து, நீர்ச்சத்து, மாவுச்சத்து இதில் மிகவும் அதிகம். ஓரளவு வைட்டமின் சி, ஆக்சாலிக் ஆசிட், பொட்டாசியம், மக்னீசியம், கந்தகம் இருக்கின்றன.

பலன்கள்: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதயநோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நா வறட்சியைப் போக்கி, சோர்வை நீக்கும். கர்ப்பிணிகள் சாப்பிடலாம். வறட்டு இருமல் போகும். பித்தம் தொடர்பான பிரச்னை நீங்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாள்கள் சாப்பிட்டால், குணம் பெறலாம். சிறுநீரக நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

மிளகாய்:

இரண்டு கப் திராட்சைகளைச் சாப்பிடுவதற்கான பலனை, ஒரு டீஸ்பூன் மிளகாய் விதைகள் தந்துவிடுகின்றனவாம். இதில் உள்ள குவார்சிடின் எனும் மூலப்பொருள், புற்றுப்பண்பு உயிரணுக்களை அழிப்பதற்கான, மருத்துவப் பொருளாக பயன்படுகிறது.

கீரை வகைகள்:

புதிய பச்சை இலை காய்கறிகளில் ஃபோலியேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இது புற்றுநோய் உண்டாக்கும் விளைவுகளை எதிர்த்து போராடுகிறது. சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள இவை, எலும்பு மற்றும் தசைகளில் உள்ள பிரச்னைகளைக் குணமாக்குகிறது.

தக்காளி:

தக்காளியில் உள்ள விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட், புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, தக்காளியில் உள்ள ‘லைகோபைன்’ வாய்ப் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கவல்லது என்றும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிரீன் டீ:

இயற்கையின் கொடையான டீயில் இருப்பது புத்துணர்ச்சி மட்டுமல்ல; ஏராளமான நன்மையும்தான். குறிப்பாக கிரீன் டீயில் அதிக நன்மைகள் இருக்கிறது கேன்சர், இதயநோய்கள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிரீன் டீ. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் குணம் இதற்குண்டு.

கீர்த்தனா தத்துவம்:

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 4 பிப் 2018