இரண்டாவது வெற்றி பெறுமா இந்தியா?


இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 4) செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தாலும், முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
செஞ்சூரியன் மைதானத்தில் இதற்கு முன்னர் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பியதால் 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக அமையும் என்பதால் சேசிங் செய்வது மிகவும் எளிதான ஒன்று. இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்க அணி 392 ரன்கள் சேஸ் செய்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.