மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

ஹெல்த் ஹேமா: அட... இவ்வளவுதானா புற்றுநோய்!

ஹெல்த் ஹேமா: அட... இவ்வளவுதானா புற்றுநோய்!

இன்று புற்றுநோய் தினம். காலை முதலே பல கட்டுரைகளும், வீடியோக்களும், முகநூல் பதிவுகளும் கொட்ட ஆரம்பித்திருக்கும்.

“அச்சச்சோ, புற்றுநோய் வந்துவிட்டதா... இனி அவ்வளவுதான் வாழ்க்கை. வெகு சீக்கிரம் மரணிக்கப் போகிறோம்” என்ற மன நிலைதான் புற்றுநோய் தீவிரமடைய முக்கியக் காரணம்.

சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போல, புற்றுநோயையும் கட்டுக்குள் வைத்து சரி செய்யலாம். மிக முக்கியமான ஒன்று ஆரம்ப நிலையிலேயே மருத்துவ முறைகள், உணவு முறைகள், மனம் மற்றும் உடலை பேணிக் காத்தால் புற்றுநோயெல்லாம் ஒரு விஷயமே இல்லை.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் சரியான சிகிச்சை பெறும் 100இல் 65 சதவிகிதம் பேர் காக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சரியான உணவு முறை இல்லை என்றாலும், புகை மற்றும் மதுப்பழக்கத்தாலும் குடும்ப வழியாக வரும் பாதிப்புகளாலும் புற்றுநோய் பரவும். ஆரம்ப கால விழிப்புணர்வு இருந்தால் நிச்சயம் புற்றுநோயை வெல்லலாம் என்பதே மருத்துவர்கள் கணிப்பு.

அக்கறை பரிதாபமாக மாறி, அவர்கள் பயத்துக்கு ஆட்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம்

புகையிலையினால் ஏற்படும் வாய் புற்றுநோய் பற்றி பல வீடியோக்களில் கண்டிருப்போம். புகை பிடித்தல், புகையிலை போடுதல், பான் மசாலா சுவைத்தல், மது அருந்துதல் போன்றவை நம் உடலில் குடல், மார்பு, இரைப்பை, வாய், நாக்கு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட காரணமாகின்றன. திருமணமாகாத பெண்களுக்கும், திருமணமாகி குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருகிறது.

காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சலை அதிகப்படுத்த பயன்படுத்தப்படும் பலவித பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனங்கள், நம் உடலில் புற்றுநோய் ஊக்குவிப்பான்களாக செயல்படுகின்றன. இரும்பு, பித்தளை, அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கும், சாயப்பட்டறை, ரப்பர் தயாரிப்பு, பென்சீன், ஆர்சனிக் போன்ற ரசாயன பொருள்கள் தயாரிப்பவர்களுக்கும் தோல், நுரையீரல், குரல்வளை, ரத்தம் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுகிறது. இதேபோல், வயதுக்கு மீறிய உடல்பருமனால் வயிற்று உறுப்புகளில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 50 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களுக்கு மட்டும்தான் புற்றுநோய் தாக்கம் இருந்தது. ஆனால், இன்றைய மேற்கத்திய கலாசார உணவு முறைகள், உடல்பருமன், உடற்பயிற்சி குறைவு மற்றும் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தினால் குழந்தைகள் முதல் இளைய தலைமுறையினரையும் புற்றுநோய் பாதித்து வருகிறது. மேலும் பற்பல காரணங்களை நேற்றும் பார்த்தோம்.

குணமாகாத புண், ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு, சளியில் ரத்தம் வெளிப்படுதல், கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது, மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல், கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம், திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல் (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு), மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல், உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம், திடீரென்று தோன்றும் அதிக மலச் சிக்கல் போன்றவை புற்றுநோயின் அறிகுறிகள்.

எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?

வாய் புற்று: புகைப்பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான் - ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.

நுரையீரல் புற்று: புகைப்பிடித்தல், ஆஸ்பெட்டாஸ் - சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு.

வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த பொரித்த உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.

ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.

மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.

கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி. வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.)

சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண்.

(இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்னைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்குக்கூட இந்த நோய் ஏற்படலாம். ‘மது அருந்தமாட்டார். புகைப் பிடிக்கவும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்து விட்டதே’ என்று வருந்திப் பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.)

புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் என்னென்ன?

மூன்று விதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன.

அவை:

1. ஆபரேஷன்

2. கீமோதெரபி(மெடிக்கல் ட்ரீட்மென்ட்)

3. ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்)

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018