மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

டிஜிட்டல் திண்ணை: மீனாட்சியம்மன் கோயில் தீ... ஆட்சிக்கு ஆபத்தா?

டிஜிட்டல் திண்ணை: மீனாட்சியம்மன் கோயில் தீ... ஆட்சிக்கு ஆபத்தா?

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று இரவு நடந்த தீ விபத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை செம அப்செட் ஆக்கியிருக்கிறது. தீ விபத்து என்ற தகவல் நேற்று இரவு முதல்வருக்கு சொல்லப்பட்ட போதே, ‘கோயில்ல தீ பிடிக்கிறது நல்லது இல்லையே... அதுவும் தைவெள்ளிக் கிழமையில்ல இன்னிக்கு...’ என வருத்தமாக சொல்லியிருக்கிறார்.

இன்று காலை, முதல்வருக்கு வேண்டப்பட்ட ஜோதிடர்கள் சிலர் அவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ‘பொதுவாக கோயிலில் தீ என்பது ஹோமம் வளர்க்கும் போதும், தீபம் ஏற்றும் போது மட்டுமே இருக்க வேண்டும். இது தானாக பற்றிய தீ. கோபத்தின் உச்சம் அந்த தீயில் தெரிந்தது. பொதுவாக கோயிலில் தீப்பற்றினால் அரசனுக்கு ஆபத்து என்பதுதான் அந்தக் காலத்தில் தொட்டு இருந்து வரும் ஐதீகம். அதனால், இப்போது கோயிலில் தீப்பிடித்ததும் நல்லதுக்கு இல்லை. இதை இரண்டு விதமாகப் பார்க்கணும். மீனாட்சியின் எல்லையில் தீ என்றால் அதனால் ஆட்சிக்கு ஆபத்து என்பது ஒரு பக்கம் இருந்தாலும் நீங்களும் உங்கள் உடல் நலத்திலும் கவனமாக இருக்கணும்..’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு முதல்வரோ, ‘நடந்திருக்கக் கூடாது. நடந்துடுச்சு. இதுக்கு என்ன பரிகாரம் செய்யணும்..?’ என கேட்டாராம். அதற்கு ஜோதிடர்களும் சில பரிகாரங்களை சொல்லி இருக்கிறார்கள். ‘அந்த பரிகாரங்களை உடனடியாக செய்யுங்க...’ என அவர்களிடம் சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் பேசினார் முதல்வர். ‘கோயில் விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருந்திருக்கணும். இப்போ பாருங்க ஆட்சிக்கே ஆபத்து வரும்னு எல்லோரும் பயமுறுத்திக்கிட்டு இருக்காங்க. நீங்க ஆய்வு நடத்த போறீங்களா... இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அமைச்சர், ‘கோயில்ல தீ அதிகம் பரவியதுக்கு காரணமே உள்ளே கடைகளில் இருந்த நெய்தான். அதுல இருக்கிற கடைகள் பெரும்பாலும் நம்ம கட்சிக் காரங்களுக்கு சொந்தமானது. யாரு என்ன செய்யுறாங்கன்னு கேட்கவே முடியலை. ..’ என்று சொல்லி இருக்கிறார். ‘இனி அப்படியெல்லாம் பார்க்காதீங்க.. தப்புன்னா யாரு செஞ்சாலும் தப்புதான்... விதிகளை மீறி எது இருந்தாலும் நடவடிக்கை எடுங்க... அது நம்ம ஆட்களாக இருந்தாலும் பரவாயில்லை...’ என சொன்னாராம் முதல்வர்.

இன்னொரு விஷயமும் முதல்வர் கவனத்துக்குப் போயிருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் ஒருமுறை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறார். அதேபோல கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது சசிகலாவும், இளவரசியும் வந்துபோனார்கள். அப்போது அவர்களுக்காக கோயிலில் சில விதிகள் மீறப்பட்டன. ஆனால், அப்போது பொறுப்பில் இருந்தவர்கள் அதை மூடி மறைத்துவிட்டார்கள். இது எல்லாமே அம்மனின் கோபத்துக்கான காரணமாக இருந்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஆன்மீகப் பெரியவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் முதல்வர் பழனிசாமி” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

அதற்கு லைக் போட்டதுடன் அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த வாட்ஸ் அப், “ஆட்சிக்கு நீதிமன்றத் தீர்ப்பால் ஒரு பக்கம் ஆபத்து என்றால், தீயால் இன்னொரு பக்கம் ஆபத்தா?’’ என்று கமெண்ட் அடித்துவிட்டு ஆஃப்லைனில் போனது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018