மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

இளம் அணியினருக்கு குவியும் பாராட்டுகள்!

இளம் அணியினருக்கு குவியும் பாராட்டுகள்!

ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பல்வேறு முன்னணி வீரர்களும், பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தில் நடைபெற்று வந்த ஜூனியர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று (பிப்ரவரி 3) நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இந்த போட்டியில் பலபரிட்சை நடத்தின. இரு அணிகளும் லீக் போட்டியில் இதற்கு முன்னர் சந்தித்த போது இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதியதால் ரசிகர்கள் மத்தியில் அதிக சுவாரஸ்யம் காணப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்கம் முதல் நிதானமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 216 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜானதன் மர்லோ மட்டும் 76 ரன்களை பெற்றார். 217 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா மற்றும் மன்ஜோட் கல்ரா இருவரும் சிறப்பாக தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ப்ரித்வி ஷா 29 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கல்ரா மற்றும் ஹார்விக் தேசை இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர். தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய கல்ரா 101 ரன்களைச் சேர்த்தார். ஹார்விக் 47 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் இந்திய அணி 220 ரன்களை சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்திய அணி பெறும் 4ஆவது ஜூனியர் உலகக்கோப்பை ஆகும். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பலதரப்பு ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களைச் சமூக வலைதளங்களில் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பான வெற்றி, இதனை படிக்கட்டுகளாக எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும் என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து பிரபல நடிகர் அமிதாப் பச்சன் வெற்றி பெற்ற இந்திய ஜூனியர் அணிக்கு வாழ்த்துக்கள். 4 முறை கோப்பையைக் கைப்பற்றிய ஒரே அணி இந்தியா. ஜூனியர் அணிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார்.

அதேபோல் பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா, முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அவரது பயிற்சியால் தான் இந்திய அணி இவ்வளவு சிறப்பாக விளையாடி கோப்பையைக் கைப்பற்றியது என பலதரப்பு பயனர்கள் மற்றும் பிரபலங்களும் தெரிவித்துள்ளனர்.

கோப்பையைக் கைப்பற்றிய ஜூனியர் அணி வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.30 லட்சமும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ரூ.50 லட்சமும் பரிசுத் தொகையாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018