மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

நாதுராமிடம் நகை வாங்கிய பெங்களூரு வியாபாரி கைது!

நாதுராமிடம் நகை வாங்கிய பெங்களூரு வியாபாரி கைது!

கொளத்தூர் நகைக் கடை வழக்கில் நாதுராமிடம் நகை வாங்கிய பெங்களூரு வியாபாரியைச் சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கொளத்தூர் நகைக்கடை ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் பல லட்சம் மதிப்பிலான தங்க வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தக் கொள்ளை வழக்கில் ராஜஸ்தான் கொள்ளையர்கள் ஈடுபட்டது தெரியவந்தது இதையடுத்து மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உட்பட ஆறு பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் விரைந்தது. கொள்ளையர்களை நெருங்கும் சமயத்தில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அப்போது குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாமல் தனிப்படை சென்னை திரும்பியது.

பின்னர் சில தினங்களுக்கு முன்பு சென்னை கூடுதல் ஆணையர் ஜெயராம் தலைமையிலான தனிப்படையினர் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாதுராம், தினேஷ், பக்தா ராம் ஆகிய மூவரையும் சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.

மூவரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில் நாதுராம் தன் கூட்டாளிகளோடு பெங்களுரூ, ஹைதராபாத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

கொளத்தூரில் கொள்ளையடித்ததில் ஒன்றரை கிலோ நகைகளை சவுகார்பேட்டையில் என்.எஸ்.சி. போஸ் தெருவில் உள்ள கடையில் அடகு வைத்து பணம் வாங்கியுள்ளனர். பக்தாராம் அளித்த தகவலின் பேரில் போலீஸார் சம்மந்தப்பட்ட கடைக்காரரிடமிருந்து நகைகளை மீட்டனர்.

மீதமுள்ள நகைகளை பெங்களூருவில் உள்ள நகைக் கடை ஒன்றில் அடகு வைத்ததாகக் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் நாதுராம் அவரது கூட்டாளிகளுடன் நேற்று முன்தினம் பெங்களூரு விரைந்தனர், அங்குள்ள ராம்லால் என்ற நபரிடம் 2 கிலோ தங்கத்தை விற்றதாக நாதுராம் கூறியுள்ளார். பெங்களூருவில் தங்கி விசாரணை நடத்திய போலீசார் நேற்று ராம்லாலையும் பிடித்துள்ளனர். அப்போது நாதுராம் தன்னிடம் ஒன்றரைக் கிலோ தங்கத்தை மட்டுமே கொடுத்ததாகவும், அதனைத் தான் பல்வேறு இடங்களில் விற்றதாகவும் ராம்லால் கூறியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 3 பிப் 2018