மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

பள்ளிக் கழிவறையில் மாணவர் கொலை!

பள்ளிக் கழிவறையில் மாணவர் கொலை!

டெல்லியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 14 வயது மாணவரைச் சக மாணவர்கள் கழிவறையில் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு டெல்லியின் சதத்பூர் பகுதியிலுள்ள ஜீவன் ஜோதி பள்ளியில் 14 வயதுடைய மாணவர் துஷார், நேற்று பள்ளிக்கூட கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

பள்ளி நிர்வாகம் மாணவர் டயரியாவால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று கூறுகிறது. ஆனால், பெற்றோர் தரப்பில் சில மாணவர்கள் துஷ்கரை தாக்கியதால் அவர் இறந்திருக்கக்கூடும் என்று குற்றம்சாட்டினர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சம்பவத்தன்று வகுப்புத் தோழர்களிடையே கழிவறைக்குள் சண்டை நடந்துள்ளது. அதில் துஷ்கரை சக மாணவர்கள் மூன்று பேர் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து போலீஸார் அந்த மூன்று மாணவர்களையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் அஜித் கே.சிங்லா கூறுகையில், “இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வகுப்புத் தோழர்களிடையே கழிவறைக்குள் சண்டை நடந்துள்ளது. துஷ்கரை மாணவர்கள் தக்கி உள்ளனர். அங்கு இருந்த சிசிடிவி காட்சிகள் கைபற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி டெல்லி அருகே குர்கானில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த பிரதியுமன் என்ற 7 வயது சிறுவன், பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டுப் பிணமாக கிடந்தான். இதுதொடர்பாக போலீஸார் முதலில் பள்ளி பேருந்தின் நடத்துநரைக் கைது செய்தனர். பின்னர், விசாரணையில் அதே பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர், அந்தச் சிறுவனை கொலை செய்தது தெரியவந்தது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018