மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

தீ விபத்துக்கு காரணம் தமிழ்தாயின் கோபமா: அப்டேட் குமாரு

தீ விபத்துக்கு காரணம் தமிழ்தாயின் கோபமா: அப்டேட் குமாரு

தப்பா தீர்ப்பு சொல்லப்போய் மதுரையே எரிஞ்ச கதை ஞாபகம் இருக்குதா? அது தான் இன்னைக்கு நடக்குதுன்னு கரெக்டா கணிக்கிறாங்க நம்ம நெட்டிசன்ஸ். “தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடுன்னு பேர் வச்சவர் அண்ணா. அவர் நினைவு நாளான இன்னைக்கு தான் டில்லியில தமிழ்நாடு இல்லத்தோட பேரை மாத்திருக்காங்க. இதை பார்த்துட்டு சங்கம் வளர்த்த மதுரையில தீ பிடிச்சுருக்கு. தமிழ்தாய் கோபமாயிட்டா. இன்னும் என்னல்லாம் ஆகப்போகுதோ?”ன்னு ஸ்டேட்டஸ் தட்டி விடுறாங்க. இன்னும் கொஞ்சம் நாளுல நம்மாளுங்க தமிழ்தாய்க்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திடுவாங்க. இன்னொரு மேட்டர் தெரியுமா? இந்திய ஜூனியர் கிரிக்கெட் டீம் வேர்ல்டு கப் ஜெயிச்சிருக்காங்க. இதுக்கு காரணம் பயிற்சியாளர் டிராவிட் தான்னு கொண்டாடுராங்க. நல்லது தான். ஆனா அதோட முடியலையே நம்மாளுங்க டிராவிட்டை புகழ்ந்து டிவிட் போடுற மாதிரி சீனியர் டீம் கோச் ரவி சாஸ்திரியை கலாய்ச்சும் டிவிட் போடுறாங்க. ஏன் சார் அவங்க வின் பண்ணுனா இவர் என்ன செய்வாரு, இல்ல சீனியர் டீம் தென்னாப்பிரிக்காட்ட தோத்தா தான் என்ன செய்ய முடியும்?

@sultan_Twitz

சீனாவில் அரை கி.மீ. கான்கிரீட் சாலையை திருடி விற்ற வில்லங்க திருடன் - செய்தி #

அடேய் நீ போட்டிருக்க ரோட்ட தான திருடுன எங்க ஊரு அரசியல்வாதிங்க ரோட்டை போடாமலே திருடுவாங்க போவியா!?

@amuduarattai

முந்தைய ஆண்டில் பெய்த, குறைந்த மழையே, அடுத்த ஆண்டில், நல்ல மழை என்று பெயரெடுத்து விடுகிறது.

@NicheBrain

ஆண்டாள் கோபம்னா திருவில்லிப்புதூரில் தீ பிடிச்சிருக்கும். இது தமிழ்த்தாயின் கோபம், அதனால்தான் சங்கம் வளர்த்த மதுரையில் தீ பற்றி இருக்கு

@selvaraj851

உயர்ந்தவிலை செருப்பா இருந்தாலும் &குறைந்தவிலை செருப்பா இருந்தாலும் கால்ல போட்டு மிதிக்கிற மாதிரி, வாழ்க்கை பணக்காரனா இருந்தாலும் &ஏழையா இருந்தாலும் செத்த பிறகு அதே ஆறடி குழியிலதான் தூக்கி போடும்.

@கருப்பு கருணா

மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடாது : தமிழிசை

நாஞ்சொல்லல..சொந்த கட்சி ஆட்சியையே வெளுக்குறாங்க இந்த அம்மான்னு. இப்ப பாருங்க.. அருண்ஜெட்லிய என்னமா கிழிக்குறாங்கன்னு. சூப்பரும்மா..

@வாசுகி பாஸ்கர்

இளையராஜாவை சந்தித்து தோழர்.திருமாவளவன் பத்மவிபூஷனுக்கு வாழ்த்து சொன்னதோடு, தான் எழுதிய "அமைப்பாய்த் திரள்வோம்", "மோடியின் முகம்" என இரண்டு புத்தகங்களை கொடுத்திருக்கிறார். அந்த இரண்டு புத்தகங்களில் இருந்து ஒரு வரியை இளையராஜா சிலாகித்து பேசினால் கூட, அவரை இசைக்காக மட்டுமே இத்தனை வருடம் சிலாகித்த கூட்டம் யாரென்பதை வடிகட்டி விடலாம்.

@SaranyaaaRaj

அதிக பணத்தை செலவழிக்க வைக்கும் உறவை விட அதிக பாசத்தை செலவழிக்க வைக்கும் உறவே சிலருக்கு போலியாக தெரிகிறது....!!

@amuduarattai

நல்லா இல்லாத சாப்பாட்டை, மனைவியிடம்,நல்லா இருக்குன்னு பொய் சொன்னால்,அதே மாதிரியே சமைத்து,படுத்துறாங்க. நல்லா இல்லன்னு உண்மையைச் சொன்னால்,அதுவும் கிடைக்காமல் போகிறது.

@amuduarattai

"இந்த பிள்ளை இல்லையென்றால்,அந்த பிள்ளையாவது,கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றும்"என்பது பெற்றோரின் எண்ணம். "நாம் ஏன் ஊத்தனும்,அவன் ஊத்தட்டும்"என்பது பிள்ளைகளின் எண்ணம்.

@HAJAMYDEENNKS

பணத்துக்காக கஷ்டப்படுறவங்க பணத்துக்காக ஏமாந்தும் விடுகிறார்கள்...!

@PARITHITAMIL

தானாக தெருவிளக்குகள் பகலில் அணைந்து இரவில் எரியும் போட்டோ சென்சேஷன் சுவிட்ச் கண்டுபிடித்து 1500முறை மனுகொடுத்தும் அங்கீகாரம் கிடைக்காததால் ஆவணங்களை கோட்டையில் வீசிச்சென்ற

ஈரோடு,விஜயமங்கலம் சேர்வைக்காரன்பாளையம் இளம்விஞ்ஞானி செந்தில்

இங்கேயே நிறைய விஞ்ஞானி அமைச்சர்கள் இருக்காங்கபா

@HAJAMYDEENNKS

எழுத படிக்க தெரியாதவனையும் பயன்படுத்த வைத்ததுதான் செல்ஃபோனின் வெற்றி...!

பள்ளி படிக்கும் சிறுவர்களையும் ஆபாச படம் பார்க்க வைத்ததுதான் அதே செல்ஃபோனின் தோல்வி....!!

@Ashok_Apk

பள்ளிக்கூடம் கோயில்மாதிரினு சொன்னாங்கெ ஒரு தடவகூட பொங்கசோறு தந்ததில்லியே...

@PragaKutty*

முன்னெல்லாம் கம்மியா மார்க் எடுத்த நீயெல்லாம் எரும மேய்கத்தான் லாய்க்கு திட்டுவானுங்க ...

இப்பலாம் நீ "இஞ்சினேரிங்"படிக்கத்தான் லயக்குனு திட்றானுக ...

@banutalks92

நாம் யூகித்த படி ஒருவர் இல்லையென்றால் தவறு அவர் மேல் அல்ல நம் யூகிப்பில் தான் தவறு

@Prabakar Kappikulam

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஆண்டிற்கு 5 லட்ச ரூபாய் மருத்துவக்காப்பீடு

யாருக்கு கொடுப்பாங்க..?

சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைக்கு…

அதாவது ஆயிரம் குடும்பத்துக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் கணக்கு.

அந்தப் பணத்தையெல்லாம் சேர்த்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலயும் தரமான அரசு மருத்துவமனையை உருவாக்கி தரமான சிகிச்சையை அரசே விலையில்லாம தரலாமே..?

@ajmalnks

தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் தவறு செய்தால் மத்திய அரசை தட்டிக் கேட்க தயங்க மாட்டோம் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

பால் பொங்குதுன்னா நம்பலாம் பால்டாயில் பொங்குதுன்னா எப்படி நம்புறது?

-லாக் ஆஃப்

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 3 பிப் 2018