மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

திருநங்கைகள் தள்ளிவிட்டதில் இளைஞர் பலி!

திருநங்கைகள் தள்ளிவிட்டதில் இளைஞர் பலி!

ஓடும் ரயிலில் இருந்து திருநங்கைகள் தள்ளிவிட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சத்தியநாராயணா, காரம் வீரம்பாபு உள்ளிட்ட 4 பேர் இன்று(பிப்ரவரி 3) காலை காட்பாடியில் இருந்து திருப்பூர் நோக்கி பொகாரா எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டு அருகில் அமர்ந்து சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது திருநங்கைகள் சிலர் பணம் கேட்டு வந்துள்ளனர்.

சத்தியநாராயணாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது அவர் பணம் இல்லை என்றும் பொங்கல் விடுமுறை முடிந்து தற்போதுதான் வேலைக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதைத் திருநங்கைகள் ஏற்க மறுத்துள்ளனர். சிறிது நேரத்தில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த திருநங்கைகள், தனக்குப் பணம் கொடுக்காமல், ஏன் ரயிலில் பயணம் செய்கிறாய் என்று கூறி ஓடும் ரயிலிலிருந்து அவரைக் கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சத்தியநாராயணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது ரயிலில் இருந்து குதித்து சத்தியநாராயணாவைக் காப்பாற்ற முயன்ற காரம் வீரம்பாபு படுகாயமடைந்தார்.அவர் தற்போது ஊத்தங்கரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ரயிலில் பயணிகளிடம் திருநங்கைகள் அடாவடியாக பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் தர மறுக்கும் பயணிகளை ஆபாசமாகப் பேசுவதாகவும், சண்டைபோடுவதாகவும் புகார்கள் எழுந்துவரும் நிலையில் பயணியைத் தள்ளிவிட்டு அவர் உயிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 3 பிப் 2018