மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்: முதல் நாள் வசூல்!

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்: முதல் நாள் வசூல்!

விஜய் சேதுபதி பல்வேறு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து நேற்று வெளியான படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். கௌதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.பி.ஆறுமுக குமார் இயக்கியுள்ளார்.

7ஜி எண்டர்டெயின்மெண்ட், அம்மா நாராயணா புரொடக்க்ஷன் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து மற்றும் இயக்குனர் ஆறுமுககுமார் மூவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ரீலீசுக்கு முன் மிகப் பெரும் எதிர்பார்ப்பை வியாபார வட்டத்திலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தது.

விஜய் சேதுபதி நடித்து வெளியான படங்கள் தமிழ் நாட்டில் அதிகபட்சம் 8 கோடிக்கு மேல் வருமானத்தைக் கொடுத்ததில்லை. இருப்பினும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் தமிழ்நாடு உரிமை 10 கோடிக்கு அவுட்ரேட் அடிப்படையில் வாங்கப்பட்டிருந்தது. சென்னை தவிர்த்து பிற ஏரியாக்களின் விநியோக உரிமை அவுட்ரேட் முறையில் விற்பனையானது. அதிகத் திரைகளில் வெளியாகும் விஜய் சேதுபதி படமும் இதுதான்.

சென்னை போன்று பிற நகரங்களிலும் தியேட்டர்களில் முன்பதிவு அதிகமாக இருந்தது. இதுவரை வெளிவந்தவிஜய் சேதுபதி படங்களை காட்டிலும் இப்படத்திற்கு ஓபனிங் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் இது குறைவாக இருந்தது.

முதல் நாள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 2.18 கோடி மொத்த வசூல் செய்திருக்கிறது ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம். விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் என இரட்டை நாயகர்கள் நடித்துள்ள படத்திற்கு இந்த வசூல் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று களமிறங்கிய நான்கு தமிழ்ப் படங்களில் சண்முக பாண்டியன் நாயகனாக நடித்துள்ள மதுரை வீரன் படத்திற்கு சுமாரான ஓபனிங் இருந்தாலும் வசூல் குறைவாகவே இருந்தது.

விஐய் சேதுபதி படத்திற்குப் போட்டியாக மற்ற நான்கு படங்களும் இல்லை என்பதால் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018