மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

48 மணி நேரத்தில் 15 என்கவுன்டர்கள்!

48 மணி நேரத்தில் 15  என்கவுன்டர்கள்!

உத்தரப் பிரதேசத்தில் காவல் துறையினர் 48 மணி நேரத்தில் 15 என்கவுன்டர்களை நடத்தி, 24 ரவுடிகளைக் கைது செய்துள்ளனர்.

லக்னோ, கான்பூர், கோரக்பூர், மீரட், முசாஃபர்நகர், புலாந்த்சாகர், ஷஹரான்பூர் உள்ளிட்ட இடங்களில் இரண்டு நாட்களில் 15 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இதில், 24 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து உத்தரப் பிரதேச டிஜிபி ஓ.பி.சிங் கூறுகையில், ”முசாஃபர்நகரில் நடைபெற்ற என்கவுன்டரில் இந்திராபால் என்ற ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான். உத்தரப் பிரதேசத்திலும் உத்தராகண்டிலும் நடைபெற்ற 30க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை சம்பவங்களில் தேடப்பட்டவர் இந்திராபால். இதேபோல, சில இடங்களில் ரவுடிகள் துப்பாக்கிக் குண்டடிபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேடப்படும் ரவுடிகளைக் கைது செய்து சிறையில் அடைப்பதும், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதும்தான் நோக்கம். ரவுடிகளைக் கைது செய்யச் சென்ற இடத்தில் போலீசாரைத் தாக்க முற்பட்டதால் என்கவுன்டர் நடத்தப்பட்டது.

குற்றவாளிகளிடம் இருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள், நாட்டுத்துப்பாக்கிகள், மோட்டார் சைக்கிள், கார் அனைத்தையும் போலீசார் மீட்டனர். கோரக்பூரில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு சந்தேகிக்கப்படும் குற்றவாளிகள், ஒரு போலீஸ் ஹவுஸ் அதிகாரி உட்பட பல போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.

மானேஷ் யாதவ், மனோஜ் யாதவ் என்ற இரண்டு பேர் ஒரு கிராமத் தலைவரை மிரட்டிவிட்டுத் தப்பியோடியதையடுத்து இந்தச் சம்பவம் நடந்தது. ஏனெனில், அந்த மிரட்டல் குறித்து தலைவர் போலீஸில் புகார் அளித்தார்” என தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018