மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

மத்திய அரசை எதனால் எதிர்க்கிறோம்!

மத்திய அரசை  எதனால் எதிர்க்கிறோம்!

யார் தவறு செய்தாலும் அதனை தட்டிக் கேட்கும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது. எனவே மக்களுக்கு பிரச்னை ஏற்படுத்தும் திட்டங்களைத் திருத்திக்கொள்ள மத்திய அரசிடம் கேட்டுக்கொள்வோம் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுடன் தமிழக அதிமுக அரசு இணக்கமாக செயல்பட்டு வந்த நிலையில், தமிழக அரசை மத்திய அரசு பின்னின்று இயக்குவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டின. இதற்கு மத்திய அரசிடம் இணக்கமாக இருந்தால்தான் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களைப் பெற முடியும் என்று ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால் தற்போது அமைச்சர்கள், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எனப் பலரும் மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

சென்னை திருவான்மியூரில் இன்று (பிப்ரவரி 3) செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது," மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தின் உரிமைகளுக்கு பங்கம் வருகிறபோது அதனை தட்டிக்கேட்கிற முதல்வராகத்தான் ஜெயலலிதா இருந்து வந்தார். அவரின் வழியில் மக்களுக்கு பிரச்னை ஏற்படுத்தும் திட்டங்கள், கொள்கைகளை திருத்திக் கொள்ளுமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்வோம். இங்கு மாறுபட்டக் கருத்துக்கு இடமில்லை. யார் தவறு செய்தாலும் அதனை தட்டிக் கேட்கின்ற கடமை மாநில அரசுக்கு இருக்கிறது" என்று பன்னீர்செல்வம் பதிலளித்தார் .

அவரிடம் பட்ஜெட்டில் தமிழகத்துக்கான திட்டங்கள் ஒன்றும் பெரிதாக இல்லையே என்ற கேள்விக்கு, "திட்டங்களின் அடிப்படையில் மற்ற மாநிலங்களுக்கான பங்கீடுகளை கூர்ந்து நோக்கி, தமிழகத்துக்கு எந்த வகையான பங்கீடுகள் வந்துள்ளன என்பதையும் ஆராய்ந்து அதன் முழு விவரங்கள் தெரிந்தவுடன் எங்களுடைய நியாயமான கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி தேவையான நிதியைக் கேட்போம்" என்று கூறினார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 3 பிப் 2018