மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

2005க்கு முன்பு பிறந்த பெண்களுக்கும் சம உரிமை!

2005க்கு முன்பு பிறந்த பெண்களுக்கும் சம உரிமை!

2005ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்களுக்கும் இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005ன்படி குடும்பச் சொத்தில் சம உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 2) தெரிவித்துள்ளது.

குடும்பச் சொத்தில் ஆண்பிள்ளைகளைப் போலப் பெண்பிள்ளைகளுக்கும் சம உரிமையுண்டு என இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 2005ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனால், 2005ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்களுக்குக் குடும்ப சொத்தில் பங்கு கிடையாது என பலர் தவறாகப் புரிந்துகொண்டு சொத்தில் பங்கு தர மறுக்கின்றனர்.

2002ஆம் ஆண்டு தங்கள் சகோதரர்களால் சொத்துரிமை மறுக்கப்பட்ட இரண்டு சகோதரிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். மனுதாரர்கள் 2005ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்ததால் சொத்தில் உரிமை கோர முடியாது என்று கூறி உயர் நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, 2007ஆம் ஆண்டு அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூசண் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, ”திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் பிறந்த வருடத்தை வைத்து அவர்களுக்குச் சொத்தில் உரிமை இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கக் கூடாது. அதனால், ஆண்பிள்ளைகளுக்குத் தனது தந்தையின் சொத்தில் எத்தனை பங்குள்ளதோ, அதேபோன்று பெண்பிள்ளைகளுக்கும் உண்டு.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018