மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

காங்கிரஸ் பாஜகவின் கூட்டுச் சதியே காவிரிப் பிரச்சினை!

காங்கிரஸ் பாஜகவின் கூட்டுச் சதியே காவிரிப் பிரச்சினை!

"காவிரி நீர் விஷயத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் நம்பத் தயாராக இல்லை. காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸும் பாஜகவினரும் சேர்ந்து நாடகமாடுகின்றனர்" என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காக ஜி.கே. வாசன் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த அவர் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கவிருப்பதாகவும், தேர்தலில் மத்திய, மாநில ஆளும்கட்சிகள், எதிர்க்கட்சிகள் என யாருடனும் கூட்டணி சேராது, தேர்தல் நேரத்தில் மக்களின் மனம் அறிந்துதான் தங்கள் கட்சி கூட்டணி அமைக்கும் என்றார்.

புது டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மாற்றம் ,பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சாலை வரி உயர்வு, ஆன்லைன் கலந்தாய்வு முடிவு, நீட் தேர்வு சர்ச்சைகள் என மத்திய மற்றும் தமிழக அரசின் பல செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தவர் அடுத்ததாக காவிரிப் பிரச்சினை குறித்துப் பேசினார்.

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசிற்கு தமாகா சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும், கர்நாடக அரசு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக, நீதிமன்ற ஆணையை மதிக்காமல் செயல்படுவதாகவும் சாடினார். மேலும், கர்நாடக காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கூட்டுச் சதி செய்துதான் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுப்பதால், இந்த விஷயத்தில் தான் எந்தக் கட்சியையும் நம்பத் தயாராக இல்லை எனவும், கருகும் பயிர்களுக்காக உடனடியாக கர்நாடகம் தண்ணீர் கொடுக்க வேண்டும்; இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 3 பிப் 2018