மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

கருக்கலைப்பு: 9 மாவட்டங்களில் கண்காணிப்பு!

கருக்கலைப்பு:  9 மாவட்டங்களில் கண்காணிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு அதிகம் நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய மருத்துவக் குழுவினர் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கருக்கலைப்பு அதிகம் நடைபெறும் மேலும் 9 மாவட்டங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளன.

கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று பரிசோதனை செய்து, அந்தக் கருவை கலைக்கவும், தவறான வழியில் கருவுற்ற பெண்கள் தங்கள் கருக்களைக் கலைக்கவும் ஸ்கேன் சென்டர்களுக்கு வருகிறார்கள். மேலும் இங்குள்ள ஸ்கேன் சென்டர்களில் பாலினத்தைத் தெரிவிக்க ரகசிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதும், இந்த நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அதிகாரிகளுக்கு அதிகளவு பணம் கொடுப்பதும் தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலையில் கருக்கலைப்பு அதிகம் நடப்பதால், இந்நகரை கருகலைப்பு மையம் எனவும் பலர் புகார் தெரிவிக்கிறார்கள். இந்தப் புகாரின் பேரில் மத்திய மருத்துவக் குழு ஆய்வு நடத்தியதில் 3 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மேலும் 9 மாவட்டங்களில் கருக்கலைப்பு சம்பவங்கள் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவங்களிலும் உள்ள ஸ்கேன் சென்டர்களில் கருக்கலைப்பு சம்பவங்கள் நடக்கிறதா என தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.

உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்யும் ஸ்கேன் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 3 பிப் 2018