மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:பிரதாப் ரெட்டி

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:பிரதாப் ரெட்டி

10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் மகிழ்ச்சியளிப்பதாக அப்போலோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில், அப்போலோ மருத்துவமனை, இதயம் மற்றும் நுரையீரல் நோய்களுக்கான சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கம் இன்று (பிப்ரவரி 3) நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, "10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவச் சிகிச்சைகள் பெறலாம். இதனால் சுமார் 50 கோடி மக்கள் பயனடைவார்கள். மேலும் இத்திட்டம் உலகிலேயே மிகப் பெரிய மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டுத் திட்டமாகும்.

வசதி படைத்தவர்களுக்குக் கிடைக்கும் உயர் மருத்துவம், ஏழைக் குடும்பங்களுக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018