மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

மாடுகளுக்கும் ஃபேசியல் ஸ்கேன்!

மாடுகளுக்கும் ஃபேசியல் ஸ்கேன்!

அயர்லாந்து நாட்டில் மாடுகளைக் கண்டறிவதற்காக ஃபேசியல் ஸ்கேன் வசதியை அந்நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

உலகில் பல்வேறு இடங்களில் ஃபேசியல் ஸ்கேன் வசதியானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளின் முகத்தில் அங்க அடையாளங்களை ஃபேசியல் ஸ்கேன் மூலம் சேமித்து வைத்துக் கொண்டு உலகில் அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களை கண்டறியும் வசதி இதனால் உபயோகப்படுத்தப்படுகிறது. அதேபோல் ஸ்மார்ட்போன் பயனர்கள் ஃபேசியல் ஸ்கேன் வசதி கொண்டு அவர்களது மொபைல்கள் அன்லாக் செய்து கொள்ளும் வசதியும் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாடுகளுக்கும் இந்த ஃபேசியல் ஸ்கேன் வசதியை அயர்லாந்து நாட்டை சேர்ந்த Cainthus என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மாடுகளின் முகத்தை பல்வேறு கோணங்களில் பதிவிட்டு அதனைச் சரியே கணித்து அந்த மாட்டின் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள இந்த வசதி அறிமுகமாக்கப்பட்டுள்ளது. மாட்டுப்பண்ணை வைத்துள்ள நபர்களை ஒரு மாடு எவ்வளவு உணவினை உட்கொள்கிறது, அதன் உடல்நிலை எவ்வாறு உள்ளது, என்பது போன்ற தகவல்களைச் சேகரித்து வைத்துக் கொள்ள இந்த ஃபேசியல் ஸ்கேன் வசதி பயன்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 3 பிப் 2018