மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

கோவை அச்சகத்தை மூட இடைக்காலத் தடை!

கோவை அச்சகத்தை மூட இடைக்காலத் தடை!

கோயம்புத்தூர் பிரஸ் காலனியில் இயங்கிவந்த மத்திய அரசின் அச்சகத்தை மூடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்தியாவில் மத்திய அரசின் கீழ் 17 அச்சகங்கள் இயங்கி வந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை, கோயம்புத்தூரில் உள்ள பிரஸ் காலனியில் மத்திய அரசு அச்சகம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. தபால் துறையில் பயன்படுத்தப்படும் கார்டுகள், கடிதங்கள், மத்திய அரசின் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் இங்கு அச்சிடப்பட்டன. இந்த அச்சகத்துக்குச் சொந்தமான 132 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ரேஷன் கடை, பழங்குடியினருக்கான பள்ளி, ஊழியர்கள் குடியிருப்பு ஆகியன இருந்துவருகின்றன. இந்த நிலம் மற்றும் சொத்துகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, கடந்த நவம்பர் மாதம் செய்திகள் வெளியானது. இரண்டு மாதங்கள் கழித்து, ஜனவரி 15ஆம் தேதி முதல் கோயம்புத்தூரில் செயல்படும் மத்திய அமைச்சகம் மூடப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்தது.

இதையடுத்து கோயம்புத்தூர் அச்சகத்தில் பணியாற்றிய 65 நிரந்தர ஊழியர்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்பட்டுவரும் அச்சகத்துக்கு மாற்றப்பட்டதாக உத்தரவிடப்பட்டது. இந்தியாவிலுள்ள 12 அச்சகங்கள் மூடப்பட்டு, மீதமுள்ள ஐந்து அச்சகங்களில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் வேலைக்குச் சேர்க்கப்படுவர் என்றும் அறிவித்தது. இந்த முடிவை எதிர்த்து மத்திய தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர் கோவை அச்சக ஊழியர்கள்.

ஆனால், மத்திய தீர்ப்பாயம் இம்முடிவுக்கு தடைவிதிக்க மறுத்தது. இதனையடுத்து, கோவை அச்சகத்தை மூடும் முடிவுக்குத் தடை விதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை நேற்று (பிப்ரவரி 2) விசாரித்த நீதிமன்றம், மத்திய அச்சக ஊழியர்களை இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணையை நான்கு வாரத்துக்கு ஒத்திவைத்தது.

கேரளா, கர்நாடகாவில் செயல்பட்டுவந்த அச்சகங்களில் பணியாற்றிய ஊழியர்களும், இதே நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அம்மாநிலக் கட்சிகள் மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018