மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

மதுரை தீ விபத்து: அமைச்சர்கள் ஆய்வு!

மதுரை தீ விபத்து: அமைச்சர்கள் ஆய்வு!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து, இன்று (பிப்ரவரி 3) தமிழக அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கிழக்கு கோபுர வாசலில் இருந்த சுமார் 20 கடைகள் சேதமடைந்தன. இரண்டரை மணி நேர போராட்டத்துக்குப் பின்பு, தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். விபத்து நடந்த பகுதியை, இன்று காலையில் இருந்தே தமிழக அரசு அதிகாரிகள் பார்வையிட்டு வந்தனர். இந்த நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று ஆய்வு செய்தனர் தமிழக அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர். அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கிருந்தனர்.

ஆய்வு முடித்ததும், அமைச்சர்கள் கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். ஆனால், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மட்டும் கேள்விகளுக்குப் பதிலளித்தார். நேற்று நடந்த தீ விபத்தினால் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றும், காலை முதலே மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாவும் அவர் தெரிவித்தார்.

”தீ விபத்தின் தன்மை குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படும்; விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்” என்று கூறினார் சேவூர் ராமச்சந்திரன்.

விபத்தினால் கோவிலிலுள்ள சிலைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், சில இடங்களில் சுவரின் மேலுள்ள காரைப்படிவு மட்டும் இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ”இரண்டு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதன் உறுதித்தன்மையைச் சோதிக்க வல்லுநர் குழு நியமிக்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர், அறங்காவலர் குழு தலைவர், எங்கள் துறையைச் சேர்ந்த இரண்டு அலுவலர்கள் அதில் இடம்பெறுவார்கள். அந்தக்குழு பாதிக்கப்பட்ட இடத்தின் ஸ்திரத்தன்மையைச் சோதித்தபின்பு, பொதுமக்கள் அங்கு செல்வதற்கு அனுமதி தரப்படும்.

ஆய்வுப்பணி முடிந்தாலும், இறுதிகட்ட விசாரணையில்தான் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். கோவிலுக்குள் 140 கடைகள் இருக்கின்றன. விபத்து நடந்த பகுதியில் மட்டும் 40 கடைகள் உள்ளன. அவற்றில் 20 கடைகள் சேதமுற்றுள்ளது. வல்லுநர் குழு ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில், அந்தப்பகுதியில் கடைகள் தொடர்ந்து இயங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018