மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

போக்குவரத்து போலீசாரின் சீருடையில் கேமரா!

போக்குவரத்து போலீசாரின் சீருடையில்  கேமரா!

சென்னையில் போக்குவரத்து போலீசார் சீருடையில் கேமரா பொருத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக, போக்குவரத்து போலீசாருக்கும் மக்களுக்குமிடையே பல்வேறு மோதல்கள் ஏற்படுகின்றன. தலைக்கவசம் அணியாமல்,சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டி வருபவர்களை வார்த்தை துஷ்பிரயோகம் செய்தல், அவர்களைத் தாக்குதல் போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன. இதுபோன்றதொரு சம்பவத்தில் மணிகண்டன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போலீசாருக்கும், மக்களுக்குமிடையே ஒரு நல்லிணக்கத்தை வளர்க்க, போலீசாரின் சீருடையில் கேமரா பொருத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டச் சோதனைக்காக தேனாம்பேட்டை, மெரீனா, கோயம்பேடு, பூக்கடை போக்குவரத்துக் காவல் உயரதிகாரிகளுக்கு கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எதிராகக் கூறப்படும் புகார்களை மட்டுமல்ல, போலீசார் லஞ்சம் வாங்குவதையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தத் திட்டம் டெல்லி, குஜராத், கேரளா, ஆந்திரப் பிரதேசம்,மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018