மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.10,000 கோடி தேவை!

காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.10,000 கோடி தேவை!

தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வரை தேவைப்படுவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செயல்படும் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் ரூ.5 லட்சம் வரையிலானத் தொகை 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்த புதிய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஆண்டொன்றுக்கு ரூ.10,000 கோடி வரை தேவைப்படுகிறது என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று (பிப்ரவரி 2) வினோத்குமார் பால் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், "மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தின்படி முதல்கட்ட பிரீமியம் தொகையாக ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை வழங்கிட கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சி 2015ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2016-17ஆம் நிதியாண்டிலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கேபினட் அமைச்சரவையின் ஒப்புதல் இத்திட்டத்திற்கு இன்னமும் பெறப்படவில்லை" என்றார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 3 பிப் 2018