மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

நீண்ட நேர உரை: கின்னஸ் சாதனை முயற்சி!

நீண்ட நேர உரை: கின்னஸ் சாதனை முயற்சி!

சென்னையில் கின்னஸ் சாதனை முயற்சியாகப் போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு குறித்து நீண்ட நேரம் உரையாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளும் விழிப்புணர்வுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், செம்மஞ்சேரியில் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் தென்னிந்தியத் தலைவர் டாக்டர் வெங்கடேஷ் பாபு, போதைப் பொருள் தடுப்பு குறித்து நீண்ட நேரம் உரையாற்றினார். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்பது அவசியம் என்ற தலைப்பில், இவர் தொடர்ந்து ஒரு மணி நேரம் 38 நிமிடங்கள் உரையாற்றினார். மாணவர்களும், இளைஞர்களும் இந்தியாவின் எதிர்காலம். போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கமுள்ளவர்களை மீட்பது மிக முக்கியம் எனப் பேசினார்.

இந்த நீண்ட உரை கின்னஸ் சாதனை முயற்சியாகக் கருதப்பட்டு, இந்த உரை வீடியோ பதிவு செய்யப்பட்டு, கின்னஸ் சாதனை புத்தக நிர்வாகத்துக்கு அனுப்பப்படவுள்ளது. இதற்கு கின்னஸ் சாதனை அங்கீரிக்கப்பட்டால், போதைப்பொருளைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஓர் உந்துதலாக இருக்கும் என டாக்டர் வெங்கடேஷ் பாபு கூறினார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018